சட்டமன்ற தேர்தலில் கள்ளஓட்டு போட்ட திமுக நபர் இன்று கள்ளச்சந்தையில் மதுவிற்பனை செய்வதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வீடியோ ஆதாரம் வெளியிட்டுள்ளார்.

தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அந்த வீடியோவை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பகிர்ந்துள்ளார். அதில் குறிப்பிட்ட திமுக நபர் காவி வேட்டியுடன், கழுத்தில் மாலை அணிந்த தோற்றத்துடன் மது விற்பனையில் ஈடுபடுகிறார். தனது இருசக்கரவாகனத்தில் வைத்தும், இடுப்பில் சொருகி வைத்தும் மதுவிற்பனையில் ஈடுபடும் காட்சிகள் வீடியோல் இடம்பெற்றுள்ளது.
இந்த வீடியோ குறித்து முன்னாள் ஜெயக்குமார் பகிர்ந்திருப்பதாவது:-
இதில் வரும் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கள்ள ஓட்டு போடுவதற்காக காவல்துறையினர் மீது கற்களை வீசி அதிகாரிகளை மிரட்டி வாக்குச்சாவடியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்ட போது கையும் களவுமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தோம்.
இதையும் படிங்க: படிக்காத பக்கங்கள் படத்துக்கு எதிராக மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் போராட்டம்
(இவர் இன்று இடுப்பில் பாட்டில் வைத்திருக்கிறார்)
அந்த தேர்தல் நாளில் ஏதாவது ஆயுதம் வைத்திருக்கலாம்..ஆயுதம் எடுத்து தாக்கலாம் என எண்ணி அவரது இரு கைகளையும் கழக தோழர்கள் கட்டி கூட்டிச் சென்றனர்.
அதற்காக என் மீது பொய் வழக்கு போட்டு என்னை சிறையில் அடைக்க முழு முயற்சி எடுத்தார் முதல்வர் ஸ்டாலின்!
வாக்கு எண்ணிக்கைக்கு நான் வந்துவிட கூடாது என்பதற்காக என் மீது மேலும் பல பொய் வழக்குகள் போட்டார்.

பல்வேறு குற்ற வழக்குடைய இந்த திமுக தொ(கு)ண்டருக்காக அறிக்கை, மாநிலங்களவை உறுப்பினர் தலைமையிலான வழக்கறிஞர் குழு என அதிகாரத்தால் அனைத்தையும் பயன்படுத்தினார்.
தற்போது இவர் மதுபாட்டில்களை சட்ட விரோதமாக சர்வ சாதாரணமாக விற்று வருகிறார். இப்போது என்ன சொல்ல போகிறார் மு.க.ஸ்டாலின்?
இவ்வாறு எக்ஸ் தளப் பக்கத்தில் ஜெயக்குமார் பதிவிட்டுள்ளார்.
அன்று கள்ள ஓட்டு! இன்று கள்ளச்சந்தையில் மது விற்பனை!