தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாகப் படித்த முன்னாள் மாணவர்கள் சந்தித்துக் கொண்ட நெகிழ்ச்சியான நிகழ்வு அரங்கேறி இருக்கிறது.
சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரில் தூய மிகாவேல் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது.
இந்தப் பள்ளியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
பழைய மாணவர்கள் தங்களது குடும்பத்துடன் இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் நண்பர்களுடன் கலந்துரயாடினர்.
முதலூர் சபை குருவானவர் செல்வன் மகாராஜா, பள்ளி தாளாளர் சாந்தராஜா ரத்தினராஜ், பள்ளி தலைமை ஆசிரியர் டேவிட் எடிசன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கோடை கால பயிற்சி முகாம் கட்டணம் – இபிஎஸ் கண்டனம்..!!!
அதே போல் 25 ஆண்டுகளுக்கு முன்பு அதே பள்ளியில் பாடம் கற்றுக் கொடுத்த ஆசிரியர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பள்ளியில் படித்தபோது தாங்கள் பெற்ற அனுபவங்களை முன்னாள் மாணவர்கள் பகிர்ந்து கொண்டனர். அதேபோல் ஆசிரியர்களும் தங்களது கடமை மற்றும் செயல்பாடுகளை கூறி மாணவர்களை பாராட்டினர்.
நிகழ்ச்சியில் முன்னாள் ஆசிரியர்களுக்கு முன்னாள் மாணவர்கள் பரிசுகள் வழங்கி கௌரவித்தனர்.
ஆசிரியர்களும் முன்னாள் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
25 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து பள்ளியின் வளர்ச்சிக்காக முன்னாள் மாணவர்கள் சார்பில் ரூபாய் 20,000 வழங்கப்பட்டது.
இறுதியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இதையும் படிங்க: ”எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்..” முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!