ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் தமிழக வெற்றிக் கழகம் ஒன்றிய தலைமை அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் ஆசியோடு,மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டுதலின் படி, மாவட்டத் தலைவர் மலர்விழிஜெயபாலா ஆலோசனையின்படி, கமுதியில் ஒன்றிய தலைமை அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
கமுதி ஒன்றிய தலைவர் மதன் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவை கழக மருத்துவ அணி தலைவர் டாக்டர். கார்த்திகேயன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
விழாவின் துவக்கத்தில் குத்துவிளக்கு ஏற்றி, அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
இவ்விழாவில் ஒன்றிய செயலாளர் சின்னராஜ், இணைச் செயலாளர் ரமேஷ், இளைஞரணி தலைவர் முனீஸ்வரன்,
மாணவரணி தலைவர் அஜித், தொண்டரணி தலைவர் வேதா,
விவசாய அணி தலைவர் காளிமுத்து மற்றும் நிர்வாகிகள் முனியாண்டி, கருப்பசாமி, திருப்பதி, பாரதி,கோகுலன் உட்பட 100 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.