ஜேடிஎஸ் எனப்படும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் எச் டி தேவகவுடாவின் பேரனும், ஹசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் புகார் எழுந்துள்ளது.

ரேவண்ணா வீட்டில் வேலை செய்து வந்த பெண் ஒருவர் அளித்த புகாரில், “ரேவண்ணா வீட்டில் மொத்தம் நாங்கள் 6 பெண்கள் வேலை செய்கிறோம்.
அவர் தனது மனைவி இல்லாத போதெல்லாம், அவர் வீட்டில் வேலை செய்யும் பெண்களிடம் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்து கொள்வர் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரித்து நிலையில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
இந்த வழக்கு விசாரணையில் பெண் ஊழியர் ஒருவர் பிரஜ்வால் ரேவண்ணா தனது மகளுக்கு செல்போனில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதாகவும் அதை தொடர்ந்து அந்த பெண் அவரது எண்ணை பிளாக் செய்ததாகவும் கூறினார்.
அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் ஐபிசி பிரிவுகள் 354 ஏ, 354 டி, 506 மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.

வெளியாகி வரும் வீடியோக்களில் அவர் பல பெண்களைக் கடுமையாக பாலியல் ரீதியாகத் துன்புறுத்தும் காட்சிகள் பதிவாகி இருக்கின்றன.அந்த வீடியோக்களின் உண்மைத் தன்மை தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது
இந்தியாவிலேயே மிகப்பெரிய செக்ஸ் ஸ்கேண்டலாக உருமாறி இருக்கும் இந்த சம்பவம் குறித்து விரைவில் பிரஜ்வல் ரேவண்ணா இந்த விவகாரத்தில் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த வீடியோக்கள் மூலம் பிரஜ்வல் ரேவண்ணா தவிர, அவரது தந்தை எச்.டி. ரேவண்ணா மற்றும் பல ஆண்களுக்கும் இதில் தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரின் தந்தை எச்.டி. ரேவண்ணா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இவர்களுக்கு எதிராகத் தனி எஸ்ஐடி விசாரணை நடத்தக் கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார்.
இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா ஏற்கனவே வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜேடிஎஸ் மற்றும் BJP ஆகிய 2 கட்சிகளும் கூட்டணியில் இருப்பதால் இந்த சம்பவம் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருவது பாஜ.க.வுக்கு எதிராகத் திரும்பி இருக்கிறது.