சமீப காலமாகப் போதைப் பொருள்களின் விற்பனை மற்றும் புழக்கம் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் போதைப் ( drugs seized ) பொருட்களுக்கு எதிராக மிகக் கடுமையான சட்டங்கள் இருந்த போதிலும்,அயல் நாடுகளில் இருந்து போதைப்பொருள் கடத்தப்படுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
போதைப் பொருள்களின் கடத்தல், விற்பனை மற்றும் புழக்கம் ஆகியவற்றைத் தடுப்பதற்காக மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்
விமான நிலையங்களைத் தொடர்ந்து இந்தியக் கடலோர பகுதிகளிலும் பலத்த கண்காணிப்பு நடைபெறுகிறது .
இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தப்படுவதாக உளவுத் துறை மூலம் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்ததுள்ளது.
இதையடுத்து இந்தியக் கடலோர காவல்படை, போதைப் பொருள் தடுப்பு பிரிவு, குஜராத் பயங்கரவாத தடுப்புபிரிவு சோதனையை மேற்கொண்டனர்.
Also Read : அரசு மருத்துவமனைகளில் உள்ள காலியிடங்களை உடனே நிரப்பிடுக – டிடிவி தினகரன் வலியுறுத்தல்
இந்நிலையில் பாகிஸ்தானிலிருந்து குஜராத் கடற்பகுதி வழியாகப் பயணிக்கும் அனைத்து கப்பல்களையும் அவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இந்திய பாதுகாப்புப் படையைப் பார்த்ததும் தப்பிக்க முயன்ற கப்பலை அதிகாரிகள் சுற்றி வளைத்து சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் படகில் ₹ 600 கோடி மதிப்புள்ள சுமார் 86 கிலோ போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது . இவற்றைக் கைப்பற்றியதுடன், கப்பலில் இருந்த 14 பாகிஸ்தானியர்களை இந்தியக் கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.
அதிகாரிகள் கைப்பற்றிய கப்பல், மற்றும் அதில் இருந்த பணியாளர்கள் அனைவரும் குஜராத்தில் ( drugs seized ) உள்ள போர்பந்தல் காவல் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். மேலும் அடுத்த கட்டமாகக் கைது செய்யப்பட்ட 14 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.