தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் உள்ள காலியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என ( govt hospital ) அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்த தினகரன் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் இல்லாததால் அங்குபணியாற்றும் தூய்மைப் பணியாளர்களே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது போன்று வெளியாகியிருக்கும் வீடியோ மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
அரசு மருத்துவமனையில், மருத்துவப் பணிக்கு எவ்வித சம்மந்தமும் இல்லாத தூய்மைப் பணியாளர்கள் சிகிச்சை அளிப்பது நோயாளிகளின் உயிரோடு விளையாடுவதற்கு சமமாகும்.
Also Read : RAC டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கு கூடுதல் கட்டணங்களை நீக்க ரயில்வே முடிவு..!!
மன்னார்குடி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை குறித்து எந்தவித நடவடிக்கையும் இதுவரைஎடுக்கப்படாததே சுகாதாரத் துறையில் இதுபோன்ற தொடர்சீர்கேடுகளுக்கு முக்கிய காரணமாகும்.
எனவே, இனியாவது அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். முறையான சிகிச்சை வழங்க தேவையான மருத்துவ உபகரணங்கள் இருப்பதையும் ( govt hospital ) உறுதி செய்ய வேண்டும் என தினகரன் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.