திருச்செந்தூர் தொகுதிக்கு உள்பட்ட இடங்களில் கோடை வெயிலின் தாகம் தணிக்கும் வகையில் நீர், மோர் பந்தலை மீனவளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
கோடை காலம் என்பதால் அனைத்து பகுதிகளிலும் நீர் மோர் பந்தல் திறக்க வேண்டும் என தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.அ. ஸ்டாலின் திமுகவினருக்கு அறிவுறுத்தி இருந்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் திமுகவினர் நீர், மோர் பந்தலை திறந்து வைத்து வருகின்றனர்.
தமிழக மீன்வளத்துறை அமைச்சரும் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணனும் தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர், மோர் பந்தலை திறந்து வைத்தார்.
குரும்பூர், அங்கமங்கலம், தென்திருப்பேரை, நாசரேத் உள்ளிட்ட பகுதிகளில் அவர் நீர் – மோர் பந்தலை இன்று (செவ்வாய்க்கிழமை) திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வின் போது நீர், மோர், தர்பூசணி பழச்சாறு, குடிநீர் மற்றும் பழ வகைகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இதில் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மக்களின் தாகத்தை தீர்க்க நீர்மோர் பந்தல் – காங்கிரஸ் முக்கிய அறிவிப்பு