கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான நட்சத்திர பேச்சாளர்களுக்கான பட்டியலில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் எம் கர்நாடகாவின் இளம் தலைவருமான தேஜஸ்வி சூர்யாவின் பெயர் இடம்பெறாதது பல கேள்விகளை எழுப்பி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளைக் காணச் சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக மே பத்தாம் தேதி நடைபெற உள்ளது.
இதில் பாஜக காங்கிரஸ் ஜனதா தளம் ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பரப்புரையில் களமிறங்கியுள்ளன தேர்தல் பரப்புரை சூடு பிடித்துள்ள நிலையில் தேர்தல் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை பாஜக தலைவர்கள் வெளியிட்டு உள்ளது
அந்த பட்டியலில் நரேந்திர மோடி, ஜேபி நாட்டா ராஜ்நாத்சிங் அமித்ஷா நிதி கட்கரி உள்ளிட்ட 40 பேரிடம் பெற்றுள்ளன இந்த நிலையில் பாஜக இளம் தலைவரான தேஜஸ்வின் சூர்யாவின் பெயர் இடம் பெறாதது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
30 வயதான தேவி சூர்யா பாஜகவின் இளைஞர் அணித் தலைவராகவும், கல்லூரிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார் இருப்பினும் பாஜக புதன்கிழமை வெளியிட்ட 40 நட்சத்திர பிரச்சார பட்டியலில் அவர் பெயர் இடம்பெறவில்லை.
மேலும் அண்மையில் அண்ணாமலையுடன் சேர்ந்து தேஜஸ்வி சூர்யா விமானத்தில் பயணித்த பொழுது விமானத்தின் அவசரக்கால கதவைத் திறந்தது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் சிக்கினார்.
இதனால் தேர்தல் சமயத்தில் இது போன்ற பிரச்சனைகளில் ஈடுபடாமல் இருக்கவே அவரது பெயர் நீக்கப்பட்டதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.