கர்நாடகாவில் கடந்த ஆண்டு நிலவி வந்த ஹிஜாப் பிரச்சனையின் போது தனி ஒரு ஆளாய் தனது உரிமைக்காக போராடிய தபாசும் ஷேக் puc 2 நிலை தேர்வு முதலிடம் பிடித்துள்ளார்.
கர்நாடகாவின் இரண்டாம் நிலை puc முடிவுகள் கடந்த 21ம் தேதி வெளியானது. அதில் மாணவி தபசும் ஷேக் 600 க்கு 593 மதிப்பெண்கள் பெற்று ஆர்ட் பிரிவில் முதலிடம் பெற்றார்.கடந்த ஆண்டு கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சை பெருமளவில் பிடித்தது இதன் ஆரம்பப் புள்ளி கர்நாடகாவில் உள்ள பள்ளியில் நடத்த ஒரு நிகழ்வாகும்.பள்ளிக்கு மதிப்பெண் சான்றிதழ் வாங்க மாணவி என்ற மாணவி ஹிஜாபணிந்து வந்திருந்தார்.
இந்த நிலையில் காவி உடை அணிந்திருந்த மாணவர்கள் சிலர் மாணவியை நோக்கி ஹிஜாபை கழட்டச் சொல்லியும், ஜெய் ஸ்ரீ ராம் என கோஷங்களை எழுப்பினர். அப்பொழுது அந்த மாணவி சிறிதும் அச்சப்படாமல் அங்குக் கூடியிருந்த மாணவர்களை எதிர்த்து அல்லாஹ் அக்பர் எனக் கூச்சலிட்டு நடந்து சென்றார்.
இது தொடர்பான காணொளி இணையத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதும் பூதாகரமான நிலையில், மாணவர்கள் சிலர் ஹிஜாப் அணிந்தும் காவி உடை அணிந்தும் பள்ளிக்கு வரத் தொடங்கினர்.
இதனைத் தொடர்ந்து மாணவிகள் சிலர் பள்ளிகளுக்கு வரும் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரத் தடை விதிக்கக் கூடாது என நீதிமன்றத்தை நாடினர் அதில் தவசும் ஒருவர் இதனைத் தொடர்ந்து எந்த ஒரு மத அடையாளங்களுடன் கல்வி நிலையங்களுக்கு என்னுடைய அனுமதி இல்லை எனவும் சீருடை மட்டுமே அணிந்து பள்ளிக்கு வர வேண்டும் எனவும் எந்த ஒரு மத அடையாளங்களுக்குக் கல்லூரிக்குள் இடமில்லை என அதிரடியாக கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் இத்தனை சர்ச்சைகளுக்கு மத்தியில், கவனமாகப் படித்து பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளார் தபசும் ஷேக். அது மட்டும் இல்லாமல் ஹிந்தி, சமூகவியல் உளவியல் ஆகிய பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் இது குறித்து ஊடகங்களுக்குப் பேட்டி அளித்த மாணவி ஹிஜாப் சர்ச்சையின் பொழுது ஹிஜாப் மற்றும் கல்வியா என இரண்டில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது அப்பொழுது நான் கல்விக்காக சில தியாகங்களைச் செய்ய வேண்டி இருக்கிறது என தெரிவித்துள்ளார்.