18வது மக்களவைக்கான தேர்தலில் 4ஆம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள 96 தொகுதிகளில் இன்று பரப்புரை நிறைவு பெறுகிறது.
18வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டமாக நடத்தப்படுகிறது. முதற்கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 19-ம் தேதி தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்றது.
இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 88 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடர்ந்து மே 7ஆம் தேதி உத்தரப்பிரதேசம், குஜராத் உள்பட 12 மாநிலங்களில் 93 மக்களவை தொகுதிகளுக்கு நடைபெற்று முடிந்தது.
இந்த நிலையில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு மே 13ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெறுகிறது. ஆந்திராவில் 25, தெலங்கானாவில் 17, உ.பி.யில் 13, மகாராஷ்டிராவில் 11, மத்திய பிரதேசத்தில் 8, மேற்கு வங்கத்தில் 8, ஜார்க்கண்ட் மாநிலத்தில் 4, ஒடிசாவில் 4, பீகாரில் 5 மற்றும் ஜம்முவில் -1 தொகுதிக்கு தேர்தல் நடக்கிறது.
ஆந்திராவில் மக்களவை தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் நடைபெறுகிறது.
மொத்தம் 96 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.
இன்னும் ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு மே 20-ம் தேதிதேதியும், மே 25ஆம் தேதி ஆறாம் கட்ட வாக்குப்பதிவும், ஏழாம் கட்டமாக, இறுதியாக ஜூன் 1ஆம் தேதியும் தேர்தல் நடைபெற இருக்கிறது.