Central Government Jobs : பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO), எழுத்துத் தேர்வு இல்லாமல் காலிப்பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கான தகுதி, சம்பளம், தேர்வு முறை போன்ற முழுவையான விவரங்களை இப்போது தெரிந்துக்கொள்வோம்.
விண்ணப்ப நடைமுறை:
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் drdo.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மொத்த எண்ணிக்கை :
DRDO வெளியிட்டுள்ள அறிக்கையின்படி மொத்தம் 12 காலிப்பணியிடங்கள் உள்ளன.
இதையும் படிங்க: ” தலைத்தூக்கும் சைபர் குற்றங்கள்..”காவல்துறையின் வினோத போட்டி!
கடைசி தேதி:
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 19 கடைசி நாளாகும்.
கல்வி தகுதி :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் இருந்து கணினி அல்லது கணினி பொறியியல் உடன் பட்டதாரி முதுகலையில் முதல் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வெண்டும்.
வயது வரம்பு :
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு 28 வயதுக்கும் குறைவாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வும் விதிக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.37,000 சம்பளம் வழங்கப்படும்.