தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் ஒன்றிய அரசின் ஆயுதப்படை காவலர் தேர்வு நடத்தப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் மாநில மொழிகளில் தேர்வு நடத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்த நிலையில் உள்துறை அமைச்சகம் அதனை ஏற்றது.