தமிழ்நாட்டில் தோசை, இட்லி சுட வரவில்லை என்றும் அண்ணாமலை தலைவராக வந்து உள்ளேன். ஜெயலலிதா எப்படி முடிவு எடுப்பாரோ அதுப்போல் தான் என் முடிவு இருக்கும் என்று அண்ணாமலை கூறிய சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
பாஜக நிர்வாகிகளாக இருந்த சிஆர்டி நிர்மல் குமார், கண்ணன் உள்ளிட்டோர் 11 பேர் பாஜகவிலிருந்து விலகி எடப்பாடி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர் .
இந்த விவகாரம் தமிழக பாஜகவினர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது பற்றி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்ததித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை.
கட்சியில் இருந்து போனால் தான் புதியவர்களுக்கு பொறுப்பு தர முடியும். அடுத்த தலைவர்கள் உருவார்கள்.திராவிட கட்சிகளை சார்ந்து தான் பா.ஜ.க. வளரும் என்று குற்றச்சாட்டு இருந்தது. பா.ஜ.க.வில் இருந்து ஆட்களை அழைத்து சென்றால் தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலைமை உருவாகி உள்ளது. இது பா.ஜ.க.வின் வளர்ச்சியை காட்டுகிறது. யாரை வேண்டுமானாலும் அழைத்து செல்லட்டும். கொள்கை உள்ளவர்கள் இருப்பார்கள்.
பா.ஜ.க.வில் இருந்து சேர்த்து தான் பெரிய கட்சி என காட்ட வேண்டுமா அந்த நிலைமைக்கு உங்கள் கட்சி வந்து விட்டதா என மக்கள் நினைக்கின்றனர். ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை இருக்கும்.
தமிழ்நாட்டில் தோசை, இட்லி சுட வரவில்லை. அண்ணாமலை தலைவராக வந்து உள்ளேன். ஜெயலலிதா எப்படி முடிவு எடுப்பாரோ அதுப்போல் தான் என் முடிவு இருக்கும். தலைவர்கள் முடிவு எடுத்தால் 4 பேர் கோபித்து கொண்டு வெளியே வருவார்கள். நானும் அந்த வரிசையில் தலைவர் தான்.
பா.ஜ.க.வில் மேனேஜராக இல்லை. கட்சி வளர்ச்சிக்கு எந்த முடிவு எடுப்பேன். தமிழ்நாட்டில் எம்ஜிஆர், ஜெயலலிதா போல நானும் ஒரு தலைவனாக செயல்பட்டு வருக்கிறேன். வரும் காலத்தில் வேகத்தில் அதிகமாக தான் இருக்கும். குறைய போவதில்லை. திட்டி விட்டு விவசாயம் செய்யாமல் வேறு கட்சிக்கு போய் வாழ்க என கோஷம் தானே போடுகிறீர்கள் என தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் ராயபேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, தமிழ்நாட்டில் எம்ஜிஆர், ஜெயலலிதா போல தானும் ஒரு தலைவனாக ஒப்பிட்டு பேசும் அளவிற்கு யாரும் இன்னும் பிறக்கவில்லை.
அதிமுக, திமுக ,பாஜக கட்சிகளில் யார் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம், இந்தியா ஜனநாயாக நாட்டில் அனைவருக்கும் சுதந்திரம் உண்டு. மேலும் பாஜகவில் உள்ளவர்களுக்கு சகிப்பு தன்மை வேண்டும். பாஜக உறுபினர்களுக்கு வாய் கொழுப்பு அதிகம் என்றும், மத்தியில் ஆளும் திருடன் பேச கூடாது என்று பேசினார்
இதனை தொடர்ந்து பேசிய அவர், கூட்டணி கட்சியாக இருந்தால் தோளில் ஏறி மிதிக்க வேண்டியது இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு காட்டமாக பேசினார்.