TASMAC நாடாளுமன்ற தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கையை ஒட்டி நான்கு நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நமது நாட்டில் விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறதது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கும் லோக்சபா தேர்தல் வரும் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது.
நாடு முழுவதும் 18 வது நாடாளுமன்ற தேர்தல் இந்தமாதம் (ஏப்ரல் ) 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் மாதம் வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. அதனையடுத்து ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: ”பாஜக ஆட்சி அமைந்தால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்..” – அண்ணாமலை உறுதி!
மேலும் நாடளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்களும் நடைபெற இருக்கிறது.அதன்படி, தழிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. அவை அனைத்திற்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.
தற்பொழுது தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அனைத்து தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வரும் 17ஆம் தேதி மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது.
இந்த சூழலில் தேர்தல் பிரசாரம் முடிந்த நாளில் இருந்து வாக்குப்பதிவு நடக்கும் ஏப்ரல் 19 வரை தமிழகத்தில் இருக்கும் மதுக்கடைகளை TASMAC மூட வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது.
அதை ஏற்றுத் தமிழக அரசு இப்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,ஏப்ரல் 17, 18 மற்றும் 19 ஆகிய 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் என அனைத்தும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.