சென்னையில், தாய் தந்தை தூக்கிலும் மகள் கழுத்தை நெரித்தும் பூட்டிய வீட்டுக்குள் உயிரிழந்து கிடந்த சடலங்களைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மணலியில் வசித்து வந்தவர்கள் ஜெகநாதன் (40) – லோகேஸ்வரி (35)தம்பதி. இவர்களுக்கு காவியா என்னும் மகள் உள்ளார். ஜெகநாதன், மணலியில் சிறுதானிய வியாபார கடை நடத்தி வந்துள்ளார்.
மணலியில் உள்ள வீட்டுமனையில் ஜெகநாதன் கடன் வாங்கி, வீடு ஒன்றும் கட்டி வந்துள்ளார்.
இன்று காலை, ஜெகநாதனுக்கு அவரது தாயார் போன் செய்துள்ளார். அவர் போனை எடுக்காததால், நேரடியாக வீட்டுக்கு வந்து கதவைத் தட்டியுள்ளார். அப்போதும் திறக்காததால், ஜன்னல் வழியாக பார்த்தபோது உள்ளே ஜெகநாதனும், அவரது மனைவியும் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கே தூக்கில் கணவனும் மனைவியும் உயிரிழந்து கிடந்துள்ளனர். இதையடுத்து சடலங்களை கீழே இறக்கியவர்கள், அறையை ஆய்வு செய்தபோது, மகள் காவியா கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சடலங்களைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: மருத்துவரின் பலான டார்ச்சர் – செவிலியரின் விபரீத முடிவு?
ஜெகநாதன், வீடு கட்ட 40லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்துள்ளார். கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கியதால், கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொள்ள குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். முதலில் மகள் காவியாவை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு கணவனும் மனைவியும் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடன் தொல்லையால் மகளைக் கொன்றுவிட்டு, பெற்றோர் தூக்கிட்டு உயிரை மாய்த்த இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.