அரசு போக்குவரத்து கழக சார்பில், சேலம் – வால்பாறை இடையே பேருந்து இயக்கம்( Salem Service )துவங்கப்பட்டுள்ளது.
சேலத்தில் இருந்து இரவு, 9 மணிக்கு புறப்படும் பேருந்து நள்ளிரவு திருப்பூர் வந்தடைத்து பின்னர் நள்ளிரவு 12:15 மணிக்கு திருப்பூரில் இருந்து புறப்பட்டு அதிகாலை, 4:20 மணிக்கு வால்பாறை சென்று சேருகிறது.
தற்போது, இரவு, 11:00 திருப்பூரில் இருந்து வால்பாறைக்கு (பொள்ளாச்சி வழி) கடைசி பஸ் இயங்கி வந்த நிலையில், இரவு, 12:15 க்கு பொள்ளாச்சி, வால்பாறைக்கான கடைசி பஸ் இந்த பேருந்து இனி இயங்கும்.
மறுநாள் மதியம், 12:30 மணிக்கு வால்பாறையில் புறப்பட்டு, பொள்ளாச்சி, திருப்பூர் வந்து, இரவு, 7:00 மணிக்கு சேலம் செல்லும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய பேருந்து சேவை மூலம் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.