விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வால் தெரியாதவர் என்று இயக்குனர் பாரதிராஜா(bharathiraja) தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமாவளவனின் அறுபதாவது பிறந்த நாள் விழா மணி விழாவாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் சிறப்பு விருதுநராக பாரதிராஜா(bharathiraja) கலந்து கொண்டார் இந்த நிலையில் நிகழ்ச்சியில் பேசிய அவர்,
இதுவரை நான் பார்த்த வகையில் சுத்தமுள்ள அரசியல்வாதி திருமாவளவன் என்றும் கக்கன் ஜீவா போன்று திரும்பவளவன் அந்த வரிசையில் உள்ளார் என்றும் தெரிவித்தார். ஆனால் அவர் வாழத்தெரியாதவர் என்றும் தலைவர் பிரபாகரனுக்கு பின்பு நான் ரசித்த அரசியல்வாதிகளில் ஒருவர் திருமாவளவன் என்று பெருமைப்படுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அவர் எனக்கு சோர்வு வரும் போது எல்லாம் திருமாவளவனின் மீசையை பார்த்தால் புத்துணர்ச்சி கிடைக்கும் .அந்த மீசையில் துணிச்சலும் கம்பிரமும் கொண்ட மனிதரைப் பார்த்தால் எவருக்குத்தான் சோர்வு இருக்காது என்று வியப்புடன் தெரிவித்தார்.
மேலும் எனது வாழ்க்கையில் மரியாதையின் உச்சமாக அவரை பார்ப்பதாகவும் இந்த பிள்ளை தனக்காக வாழ்க்கை அமைத்துக் கொள்ளவில்லை என்பது எனக்கு மிகுந்த வருத்தம் அளிப்பது ஆகவும் தெரிவித்தார். திருமணம் செய்தால் சுயநலமாகி விடுவோமோ என்று எண்ணத்தில் இதுவரைக்கும் திருமணம் ஆகாமல் அரசியலில் பிறருக்காக உழைத்து வருகிறார்.
மேலும் திருமாவின் கை பிடித்தாலே ஒரு சுகம் தான் ஐ லைக் யூ திருமால் திருமாவை பார்த்தால் சிம்மக் குரலும் சிவாஜி என்பார்கள் எதையும் தாண்டி கர்ச்சுக்கு பேச்சாளர் சனாதானத்தை வேருட கிள்ளி எரிக்க வேண்டும் என்றும் சுயமரியாதையை காப்பாற்ற வேண்டும் அயராது பாடுபட்டு உழைத்து வருபவர்.
ஏன் எனக்கு 83 வயது ஆகிறது என் வயதை தாண்டி திருமாவளவன் பல நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் அரசியலில் நிலைத்து நின்று மக்களுக்கு மென்மேலும் பணியாற்ற வேண்டும் என்றும், அவர் வாழ்வில் எல்லாவித நலன்களும் பெற வாழ்த்துகிறேன் என்றும் நிகழ்ச்சியில் உணர்ச்சி பூர்வமாக இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.