ITamilTv

செவ்வாயன்று சித்ரா பவுர்ணமி; திருவண்ணாமலைக்கு 2,500 சிறப்பு பஸ்கள் இயக்கம்

thiruvannamalai

Spread the love

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, திருவன்ணாமலைக்கு 2500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக, மாவட்ட ஆட்சியரகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்துக்குப் பின்னர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மாதம் தோறும் பவுர்ணமி தினத்தில் ஆன்மீக அன்பர்கள் திருவண்ணாமலைக்கு சென்று கிரிவலம் செல்வது வழக்கம். பவுர்ணமி நிலவொளியில் மலையைச் சுற்றி வரும்போது அங்கு சித்தர்களும் உலாவருவதாகவும், அவர்களின் நல்லெண்ண அலைகள் தங்கள் மீதும் படுவதாகவும் பக்தர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.


இந்த சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பவுர்ணமி தினம் விஷேசமானதாகும். அதனால் லட்சக்கணக்கில் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு சென்று மலையை கிரிவலம் வந்து கோயிலில் சாமி தரிசனம் செய்வதுண்டு.

இதையும் படிங்க: April 22 Gold Rate : அதிரடியாக குறைந்தது தங்கம் விலை! குஷியில் நகை பிரியர்கள்!


சித்ரா பவுர்ணமி நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலையில் தொடங்கி, புதன்கிழமை அதிகாலையில் நிறைவடைகிறது. இதையொட்டு இந்த ஆண்டு 25லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சித்ரா பவுர்ணமி தின முன்னேற்பாடு பணிகள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆலோசனை மேற்கொண்டார்.

கூட்டத்துக்குப் பின்னர் முன்னேற்பாடு பணிகள் குறித்து அவர் கூறியதாவது:-

பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து செல்லும் வகையில், நகரினை இணைக்கும் 9 முக்கிய சாலைகளில் 13 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தங்களது வாகனங்களில் வரும் பக்தர்களுக்காக நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகள் என 55 இடங்களில் கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பவுர்ணமியை முன்னிட்டு 2,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. விழுப்புரம் மற்றும் வேலூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இதையும் படிங்க: மரண பயத்தை போக்கி நல்லதை நடத்தித் தரும் யோக நரசிம்மர் கோவில்


மேலும் தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து கிரிவலப்பாதைக்கு செல்ல 20 தனியார் பேருந்துகள் மற்றும் 81 பள்ளி வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படும். இதுதவிர இலவச பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.

பல்வேறு பகுதிகளில் இருந்து 6 சிறப்பு ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் அதிக அளவில் திரள்வதால்,
கோவில் வளாகத்திற்குள் 3 மருத்துவ குழுக்கள் , 85 நிலையான மருத்துவ குழுக்களும், 108 அவசர ஊர்தி 20 வாகனங்களும், 15 மொபைல் அவசர ஊர்தியும் நிறுத்தப்படும்.

2 டி.ஐ.ஜி. தலைமையில் 10 போலீஸ் சூப்பிரண்டுகள், 25 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் என 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

மாவட்ட நிர்வாகம் சார்பில் கோவில் வளாகத்திற்குள் 140 கண்காணிப்பு கேமராக்களும், கிரிவல ப்பாதையில் 97 கண்காணிப்பு கேமராக்களும், 24 இடங்களில் காவல் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.

இதையும் படிங்க: காவி என்பது தியாகத்தின் வண்ணம் – தமிழிசை புதுவிளக்கம்..!!!

மேலும் கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், தீயணைப்பு மற்றும் வட்டார போக்குவரத்து துறை அலுவலகம் ஆகிய 4 இடங்களில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மூலம் 1,800 தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட உள்ளனர். இணைய வழியில் அனுமதி பெற்ற 105 இடங்களில் மட்டும் அன்னதானம் வழங்கப்படும். சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நகரில் மற்றும் சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.

கிரிவலப்பாதையில் குடிநீர் வசதிகளும், 106 இடங்களில் தற்காலிக கழிப்பறை வசதிகளும், 425 இடங்களில் நிரந்தர கழிப்பறை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
தெரிவித்தார்.


Spread the love
Exit mobile version