பாஜக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் சர்வாதிகாரம். பாசிச கொள்கை கொண்ட பாஜக, எமர்ஜென்சி பற்றி பேச அருகதை இல்லை என்று திமுக எம்பி ஆ.ராசா விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து பேசியிருந்தார் .
இதனை தொடர்ந்து பேசிய திமுக எம்பி ஆ.ராசா,ஒவ்வொருவரும் அவரவர் செய்துகொண்டிருக்கும் வேலையையே செய்ய வேண்டும் என பாஜக நினைக்கிறது.
ஆனால் பாஜக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் சர்வாதிகாரம் நிறைந்து காணப்படுகிறது. பாசிச கொள்கை கொண்ட பாஜக, எமர்ஜென்சி பற்றி பேச அருகதை இல்லை என்று தெரிவித்தார்.
மேலும் 8 முறை பரப்புரைக்கு பிரதமர் மோடி வந்தும், திராவிட மண்ணில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர்என்று ராசா தெரிவித்தார்.
பாஜக அரசு நினைப்பதை அவர்களாக சொல்வது இல்லை. குடியரசுத் தலைவர், சபாநாயகர் மூலமாக சொல்கின்றனர். மேலும் எமர்ஜென்சியை அமல்படுத்தியதற்காக பலமுறை மன்னிப்பு கேட்டுள்ளார் இந்திரா காந்தி என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர்,” மோடியை கூட கடவுளின் தூதராக ஏற்றுக்கொள்ள தயார். ஆனால் அவருக்கு அத்தகைய தகுதிகள் இருக்க வேண்டும்.
ஆனால், அவருக்கு அப்படி எந்த தகுதியும் இல்லை என்பது தான் பிரச்சனை. அதனால்தான் அவரை அப்படி நம்ப முடியவில்லை என மக்களவையில் ஆ.ராசா தெரிவித்த கருத்து பாஜக மக்களவை உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவுத்தனர்.