நாட்டின் பொருளாதார வளர்ச்சியே அரசாங்கத்தின் முன்னுரிமையாக உள்ளது என்றும், பணவீக்கம் ஒரு வரம்பிற்குக் குறைந்துள்ளதால் இந்தியாவில் அரசு இனி வேலைவாய்ப்பை உருவாக்குதல் மற்றும் வருமான விநியோகம் முன்னுரிமை அளிக்கும் என்று டெல்லியில் நடைபெற்ற இந்தியா-அமெரிக்கா தொழில் கவுன்சிலின் உச்சி மாநாட்டில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசினார்.
“கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததைத் தொடர்ந்து, உலகளவில் பண வீக்கம் அதிகரிக்கத் தொடங்கியது.
இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் பணவீக்கம் 7 சதவீதத்தைக் கடந்தது. ரிசர்வ் வங்கி இந்தியாவில் பணவீக்கத்தை 2 சதவீதம் முதல் 6 சதவீதத்துக்குள் கட்டுக்குள் வைக்க இலக்கு நிர்ணயித்தது. ஆனால், இந்தியாவில் பணவீக்கம் 7 சதவீதத்தை தாண்டியது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் மேற்கொண்டன.
இதையடுத்து கடந்த ஜூலை மாதம் பணவீக்கம் 6.7 சதவீதமாக குறைந்தது. கடந்த சில மாதங்களில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தக் கூடிய நிலைக்கு நாம் கொண்டு வந்துள்ளோம். பணவீக்கம் இந்தியாவின் முன்னுரிமை இல்லை. இது உங்களுக்கு ஆச்சரியம் அளிக்கலாம்.
பணவீக்கத்தைக் காட்டிலும் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகமாக உருவாக்கி தரவும், வருவாய் பகிர்வும்தான் எங்கள் முன்னுரிமையாக உள்ளது.”
மேலும் பணவீக்கம் இந்தியாவின் முன்னுரிமை இல்லை. இது உங்களுக்கு ஆச்சரியம் அளிக்கலாம். பணவீக்கத்தைக் காட்டிலும் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகமாக உருவாக்கி தரவும், வருவாய் பகிர்வும்தான் எங்கள் முன்னுரிமையாக உள்ளது.”
இதனை தொடர்ந்து ,இந்தியாவின் டிஜிட்டல் புரட்சி அமெரிக்காவிற்கு முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். டிஜிட்டல் வர்த்தகத்திற்கான இந்தியாவின் திறந்த நெட்வொர்க் சில்லறை விற்பனை மற்றும் உற்பத்தியில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான புதிய ஆலோசனைகளை ஆராய்ந்து, பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு முடிந்தவரை அவற்றைத் தீர்க்க முயற்சிப்பதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.
மேலும் இந்தியா தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் முன்னேறுவதை உறுதி செய்வோம் என்றார். பணவீக்கம் குறித்து பேசிய அவர், பணவீக்கம் குறித்து இப்போது எந்த கவலையும் இல்லை என்றார். கடந்த சில மாதங்களாக எங்களால் இதனை சமாளிக்கக்கூடிய நிலைக்குக் கொண்டு வர முடிந்துள்ளது.என்று உச்சி மாநாட்டில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.