பூலித்தேவரின் 307வது பிறந்தநாளையொட்டி மரியாதை செலுத்துகிறேன் என பிரதமர் மோடி தமிழில் டுவிட் செய்துள்ளார் “வரிக்குப் பதிலாக நெல்லாவது கொடு” என்று ஆங்கிலேயர்கள் கேட்ட போது, “வரி என்று நீ கேட்டால் ஒரு மணி நெல்கூட நான் தர முடியாது” என்று ஆங்கிலேயருக்கு எதிராக குரல் கொடுத்தவர் பூலித்தேவர் .
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும் செவலில் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவன் 307-வது பிறந்தநாள் விழா இன்று நடக்கிறது.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும் செவலில் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவன் 307-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. மேலும் பூலித்தேவன் முழு உருவ வெண்கல சிலைக்கு தமிழக அரசு சார்பிலும், பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் சார்பிலும் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,
மாவீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்த நாளில் வணக்கங்களை செலுத்துகிறேன். அவரது வீரமும் உறுதிப்பாடும் எண்ணற்றோருக்கு ஊக்கமளித்து வருகிறது. முன்னணியில் நின்று அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டவர். மக்களுக்காக எப்போதும் தளராது பாடுபட்டவர்.
— Narendra Modi (@narendramodi) September 1, 2022
இந்தநிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், மாவீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்த நாளில் வணக்கங்களை செலுத்துகிறேன். அவரது வீரமும் உறுதிப்பாடும் எண்ணற்றோருக்கு ஊக்கமளித்து வருகிறது. சிறுவயதிலேயே வீர உணர்ச்சியும், இறையுணர்வும் மிகுந்தவர். ஆங்கிலேயரையும், கூலிப்படைகளையும் எதிர்த்து 12 ஆண்டுகள் தொடர்ந்து போர் புரிந்தவர். ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவுக்கு அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டவர் என்றும் மக்களுக்காக எப்போதும் தளராது பாடுபட்டு . சுதந்திரம் பெற்றுத்தந்தவர் என கூறியுள்ளார்