குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஆட்டோ ஓட்டுநரின் அழைப்பை ஏற்று அவரது வீட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் இரவு உணவு அருந்தினார்.
குஜராத் சட்டமன்றத் தேர்தலையொட்டி இரு நாள் பயணமாக குஜராத் வந்திருந்த ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அகமதாபாத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
இந்த நிலையில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான ஆம் ஆத்மியின் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இரண்டு நாள் குஜராத் பயணத்தை மேற்கொண்டுள்ள திரு கெஜ்ரிவால், பிற்பகல் அகமதாபாத்தில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் கூட்டத்தில் உரையாற்றினார்.கட்லோடியா பகுதியில் வசிக்கும் விக்ரம் டான்டானி என்ற ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர், திரு கெஜ்ரிவாலை அவரது வீட்டில் இரவு உணவு சாப்பிடுமாறு கேட்டுக் கொண்டார்.
இது குறித்து ஆட்டோ ஓட்டுநர் தெரிவிக்கையில் ,”நான் உங்கள் ரசிகன். சமூக வலைதளங்களில் நான் பார்த்த ஒரு வீடியோவில், நீங்கள் பஞ்சாபில் உள்ள ஒரு ஆட்டோ டிரைவர் வீட்டிற்கு இரவு உணவு சாப்பிடச் சென்றீர்கள். எனவே, இரவு உணவிற்கு என் வீட்டிற்கு வருவீர்களா?” என்று திரு தண்டனி கேட்டார்.
Gujarat के Auto वाले के निमंत्रण पर @ArvindKejriwal जी गए उनके घर!
परिवार वालों को नहीं हुआ विश्वास!#KejriwalRukegaNahin pic.twitter.com/iqG0QLvWDI
— AAP (@AamAadmiParty) September 12, 2022
அவரது கோரிக்கையை ஏற்ற அரவிந்த் கெஜ்ரிவால், இரவு 7 மணியளவில் ஹோட்டலில் இருந்து ஆட்டோவில் புறப்பட்டார். பாதுகாப்புக் காரணங்களை சுட்டிக்காட்டி போலீசார் அவரை தடுத்து நிறுத்தியதால், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் அவர் ஆட்டோ டிரைவர் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநருக்கு அருகில் ஒரு போலீஸ் அதிகாரி அமர்ந்திருந்தார், அதே நேரத்தில் இரண்டு போலீஸ் கார்கள் முச்சக்கர வண்டியை அழைத்துச் சென்றன.