அயோத்தி ராமர் கோயிலில்(Ram temple) ராமர் சிலை பிரதிஷ்டை விழாவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வரும் 22ம் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை விழா நடைபெறுகிறது.
இதில், பிரதமர் நரேந்திர மோடி, ஆன்மிக தலைவர் தலாய் லாமா, கேரளாவின் மாதா அமிர்தானந்தமயி, யோகா குரு பாபா ராம்தேவ், சினிமா நட்சத்திரங்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மாதுரி தீட்சித், அருண்கோவில், திரைப்பட இயக்குனர் மதுர் பண்டார்கர் மற்றும் பிரபல தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, பிரபல ஓவியர் வாசுதேவ் காமத், ஐ.எஸ்.ஆர்.ஓ. நிலேஷ் தேசாய் மற்றும் பல பிரபலங்கள் என பங்கேற்க உள்ளனர்.
அந்த வகையில் ஜனவரி 22ம் தேதி நடைபெறவுள்ள ராமர் சிலை பிரதிஷ்டை விழாவுக்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வரும் நாள்களில் மற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள், இதர கட்சி தலைவர்கள், மாநில ஆளுநர்கள், முதல்வர்கள் ஆகியோருக்கு ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகம் சார்பில் தனித்தனியாக அழைப்பு விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.