பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் ,அவருக்கு தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உடல்நிலை குறித்து தற்பொழுது தகவல் வெளியாகி உள்ளது.
கராச்சியில் 8 நவம்பர் 1927 ஆம் ஆண்டு எல்.கே.அத்வானி பிறந்தார். இவரது இயற்பெயர் லால் கிருஷ்ண அத்வானி ஆகும்.
இந்தியப் பிரிவினையின் போது இந்தியாவுக்கு குடிபெயர்ந்தார் மற்றும் பம்பாயில் குடியேறினார், அங்கு அவர் தனது கல்லூரிக் கல்வியை முடித்தார்.
அத்வானி 1941 ஆம் ஆண்டு தனது பதினான்கு வயதில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்து ராஜஸ்தானில் பிரச்சாரகராகப் பணியாற்றினார்.1942ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்ந்தார்.
இதையும் படிங்க: நாடாளுமன்றத்தில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும் – போர் கொடி தூக்கிய சமாஜ்வாதி!
அதன் பிறகு 1980ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடன் சேர்ந்து பாரதிய ஜனதா கட்சியை தோற்றுவித்தார்.
1986 முதல் 1990 வரை பாஜக தேசியத் தலைவராக இருந்த அவர், பின்னர் 1993 முதல் 1998 வரையிலும், 2004 முதல் 2005 வரையிலும் அந்த பதவியில் இருந்தார்.
இதன்மூலம், பாஜக தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
தற்பொழுது அத்வானிக்கு 96 வயதாகும். வயது முப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு (ஜூன் 26) டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார்.
உடனடியாக அவரை தீவிரச் சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், அவரது உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, சிறுநீரகத் துறை மருத்துவர்களின் மேற்பார்வையில் அவர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.