பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மீது பாலியல் புகார் கூறி போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனைகளைப் PTஉஷா கடுமையான விமர்சித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் எம்பியான பிரிஜ் பூஷன் சரண் சிங் என் மீது மல்யுத வீராங்கனைகள் பாலியல் புகார் கூறியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையி இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள மத்திய அரசு ஒரு குழு ஒன்றை அமைத்தது. மல்யுத்த வீராங்கனைகளின் குற்றச் சாட்டைகள் குறித்து வரும் ஒரு மாதத்திற்குள் விசாரணையை நடத்தும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராத் தாகூர் தெரிவித்திருந்தார்.
அதன்படி இந்த குழு கடந்த 5ம் தேதி மத்திய அமைச்சரிடம் அறிக்கையைச் சமர்ப்பித்தது. ஆனால் இதுவரை அந்த குழு அறிவித்த அறிக்கையை மத்திய அமைச்சகம் இதுவரை வெளியிடப்படவில்லை.இதற்கு இடையில் மல்யுத்த வீரர்கள் நரேஷ் போகத், விக்னேஷ் புண்ணியம் ,சாக்ஷி மாலிக், ரவி தவ்யா தீபக் பூன்யா ஆகியோர் பிரிஜ் பூஷன் சரண் சிங் எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றன.
இதனையடுத்து அவர்கள் போராட்டங்கள் தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் PTஉஷாவிற்குக் கடிதம் எழுதியுள்ளன.
இதனை அடுத்து வீராங்கனைகளைப் PTஉஷா கடுமையாகத் தாக்கி உள்ளார். மேலும் அவர், வீரர்கள் நடுவீதியில் இறங்கி போராட்டம் நடத்தி இருக்கக் கூடாது எனவும், அவர்கள் குறைந்தபட்சம் அறிக்கையில் பதிலுக்காகக் காத்திருக்க வேண்டும்.
விளையாட்டுக்கும் நாட்டிற்கும் நல்லதல்ல என்றும் இது எதிர்மறையான அணுகுமுறை, மிகவும் ஒரு இனமான செயல் என்றும் தெரிவித்திருந்தார். மேலும் இவரது கருத்து மல்யுத்த வீரர்கள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.