Qutub Minar-இந்தியாவின் நினைவு சின்னமான குதுப் மினார் ருவாண்டா தேசிய கொடியின் வண்ணங்களால் நேற்று ஒளிர செய்யப்பட்டது.
1994-ம் ஆண்டு ருவாண்டாவில் நிகழ்ந்த 100 நாள் படுகொலையின் நினைவாக இந்த நிகழ்வு நடைபெற்றபெற்றது. எட்டு லட்சம் மக்களின் உயிரை பறித்த படுகொலையின் 30-ம் ஆண்டு நினைவு தினம் ருவாண்டாவின் தலைநகர் கிகாலியில் கடைப்பிடிக்கபட்டது. இதில் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் தம்மு ரவி கலந்துகொண்டார்.
இதையும் படிங்க:
உலகை உலுக்கிய இந்த படுகொலை சம்பவத்தின் 30 ஆண்டுகளை நினைவுக்கூறும் விதமாக இந்தியாவின் குதுப் மினாரில் ருவாண்டாவின் தேசிய கொடி ஒளிர செய்யப்பட்டது குறித்து, வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அவரது எக்ஸ் வலைதளம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:
அதில், ருவாண்டாவின் மக்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட 100 நாள் படுகொலையை நினைவுகூரும் விதமாக ஐ.நா-வின் சர்வதேச தினத்தை குறிக்கும் வகையில், ருவாண்டா மக்களுடன் இந்தியா துணை நிற்பதை குறிக்கும் விதமாக குதுப் மினாரில் அவர்களது தேசிய கொடி ஒளிர செய்யப்பட்டதாக பதிவிட்டுள்ளார்.
இந்த வண்ணமிகு லேசர் ஒளிக்காட்சி நிகழ்வு தொடர்ந்து 45 நிமிடங்கள் நீடித்தது குறிப்பிடத்தக்கது.