பொதுவாக, குடிநீர் பற்றாக்குறை, மின்சார தேவை மற்றும் கல்வி தேவைகளுக்காக மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம் எழுதும் காலங்கள் மாறி எங்கள் ஊரில் உள்ள மதுபான கடையில் கிங்ஃபிஷர்( Kingfisher)பிராண்ட் கிடைக்கவில்லை எனத் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம் எழுதிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஜக்டியால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் தனது பகுதியில் உள்ள மதுபான கடையில் கிங்பிஷர் ( Kingfisher) பிராண்ட் மதுபானம் கிடைக்கவில்லை என மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம் எழுதி உள்ளார்.
அதில் குடிபிரியர்கள் அனைவரும் தரமற்ற மதுபானத்தை அருத்துவதாகவும் இதனால் அவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும், அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தங்களுக்கு பிடித்தமான மதுபானங்கள் ஊர்களில் உள்ள மதுபான கடைகளில் கிடைக்காததால் வெளியூர்களுக்குப் பயணம் செய்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் வாகன விபத்துகள் ஏற்பட நேரிடுகிறது அவர் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து கிங்பிஷர்( Kingfisher) பிராண்ட் மதுபானங்கள் அனைத்து மதுபான கடைகள் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்து தர வேண்டும் என அவர் மாவட்ட ஆட்சியருக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக உள்ளூர் வானொலி நிலையம் மூலமாகவும் அவர் புகார் கொடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.மதுபான கடையில் கிங்ஃபிஷர்( Kingfisher)பிராண்ட் கிடைக்கவில்லை எனத் இளைஞர் ஒருவர் ஆட்சியருக்கு புகார் தெரிவித்த சம்பவம் அப்பகுதி மக்களிடயே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.