The kerala story திரைப்படத்தின் ட்ரைலர் திட்டமிட்டுப் பிரிவினை வாதத்தைத் தூண்டு வகையில் இருப்பதாகக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஹிந்தியில் விபுல் அம்ருத்லால் ஷா தயாரித்து, சுதிப்தோ சென் இயக்கிய இந்தத் திரைப்படம் the kerala story. இந்த படத்தில்
ஆதா ஷர்மா,யோகிதா பிஹானி,பெனடிக்ட் காரெட்,எலீனா கோல்,சித்தி இத்னானி,பிரனாய் பச்சௌரி,பாவனா மகிஜா,சந்திர சேகர் தத்தா,சோனியா பாலானி,விஜய் கிருஷ்ணா,உஷா சுப்ரமணியன்,பிரணவ் மிஷ்ராஆகியோர் நடித்துள்ளனர்.
டிரெய்லர் சர்வதேச எல்லைக்கு முன்னால் ஒரு முஸ்லீம் பெண் தனது கதையை விவரிக்கிறது. நடிகை அதா ஷர்மா நடித்த கேரக்டரில், நான் முன்பு ஷாலினி உன்னிகிருஷ்ணனாக இருந்ததாகவும், செவிலியராக மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகவும் கூறுகிறார்.
அவள் வலுக்கட்டாயமாக இஸ்லாமிற்கு மாற்றப்பட்டு பாத்திமா பா என்று பெயர் மாற்றப்பட்டதாகவும், பின்னர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியாக மாறுவதற்காக அனுப்பப்பட்டதாகவும், இறுதியில் ஆப்கானிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் கூறுகிறார்.
ஏமன் மற்றும் சிரியாவின் பாலைவனங்களில் புதைக்கப்படுவதற்காக மட்டுமே ISIS க்கு பயங்கரவாதிகளாக அனுப்பப்பட்ட கேரளாவிலிருந்து 32000 மதம் மாறிய முஸ்லிம் பெண்களின் வலியை ‘தி கேரளா ஸ்டோரி’தொடர்பான காட்சிகள் ட்ரைலரில் இடம் பெற்றுள்ளன.
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் சுவரொட்டி கடந்த ஆண்டு நவம்பர் 3, 2022 அன்று, ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற புதிய படத்தின் டீசர் வெளியிட்டிருந்த நிலையில் இதற்குக் கேரளவில் உள்ள பல அரசியல் கட்சி தலைவர்கள் க டும் கண்டனம் தெரிவித்திருந்தது.
The kerala story திரைப்படம் மே ஐந்தாம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், இந்த திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டோர் கோரிக்கை பிடித்து உள்ளன.
இந்த நிலையில் the kerala story திரைப்படத்திற்குக் கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கேரளாவில் தேர்தல் அரசியலில் ஆதாயம் பெறச் சங்க பரிவார் அமைப்புகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் அவர்கள் கொள்கைகளைப் பரப்புரை செய்வதற்காக எடுக்கப்பட்ட திரைப்படம் என்று ட்ரைலரை பார்த்தாலே தெரிகிறது என்றும் வகுப்புவாதம் மற்றும் கேரளாவிற்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக வேண்டும் என்று எடுக்கப்பட்டுள்ளது.
விசாரணை அமைப்புகள் உயர்நீதிமன்றம் மத்திய உள்துறை அமைச்சகம் கூட நிராகரித்த லவ் ஜிகாத் குற்றச் சாட்டுகளை வடிவமைத்தது திட்டமிட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகும். ஆனால் சமீபத்தில் லவ் ஜிகாத் என்ற ஒன்று கிடையாது என்றும் மத்திய அமைச்சர் ஸ்ரீ கிருஷ்ணன் ரெட்டி நாடாளுமன்றத்தில் தெரிவிதிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது