இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்து கல்வி, தொழில் மற்றும் நிதி ரீதியான தேவைகளுக்கு மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.,எழும் 4 மில்லியன் இந்தியர்கள் அமெரிக்காவில் உள்ளனர.
அன்மை காலமாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இந்தியர்கள் மீது குறிவைத்து இனவெறி தாக்குதல் நடத்தப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது.அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இரண்டு மாதத்தில் மட்டும் சுமார் 14 பெண்கள் மீது ஒரு நபர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
கலிபோர்னியாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் ,கடந்த ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் 50-73 வயது மதிக்கத்தக்க புடவை அணிந்த பெண்களை குறிவைத்து இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். சுமார் 14 பெண்களை தாக்கி 35,000 டாலர் மதிப்பிலான நெக்லெஸ் உள்ளிட்ட நகைகளை பறித்துள்ளார்.
நபர் பாரம்பரிய உடைகள் மற்றும் நகைகளை அணிந்த இந்து அடையாளம் கொண்ட இந்திய பெண்களை குறிவைத்தே இத்தாக்குதலை இந்த நபர் மேற்கொண்டுள்ளதால், அப்பகுதி நிர்வாகம் இந்த குற்றத்தை இந்துக்களுக்கு எதிரான குற்றமாக பதிவு செய்துள்ளது.ஒரு திருட்டு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரையும் இந்த லாதன் ஜான்சான் தாக்கியுள்ளார்.
இங்கு வாழும் அனைத்து தெற்காசிய மக்களுக்கும், இந்தியர்களுக்கும் உரிய பாதுகாப்பு தரப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக இந்து அமெரிக்க அமைப்பு கூறுகையில், தொடர்ச்சியாகமில்பிடாஸ், சான் ஜோஸ், சான்டா கிளாரா மற்றும் சன்னிவேல் உட்பட தெற்கு வளைகுடாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த கொள்ளைகள் பெரும்பாலும் பதிவாகியுள்ளன.
இதை தடுக்க சட்ட ரீதியான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.