பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பயணித்த விமானம் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறால் சனிக்கிழமை நியூயார்க்கில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விபத்துக்குள்ளாக இருந்த தருணத்திலிருந்து நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமையன்று பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் ஆன இம்ரான்கான், சக்லாலா பகுதியிலிருந்து குஜ்ரன்வாலாக்கு பேரணிக்காக விமானத்தில் பயணம் செய்தார். அப்போது நடுவானில் திடீரென்று ஏற்பட்ட தொழில் நுட்பக்கோளாறு காரணமாக விமானம் பாதிவழியில் தரையிறங்கப்பட்டது.
தொழில் நுட்பக்கோளாறு கண்டறியப்பட்ட உடனே விமானத்தின் ஓட்டுநர் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு அவசரக்கால தரையிறக்கம் நடவடிக்கை படி பாதுகாப்பாகத் தரையிறக்கினார். விமானம் புறப்பட்ட பிறகு கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் பிறகு முன்னாள் பிரதமர் இம்ரான்கான், குஜ்ரன்வாலாக்கு சாலை வழியாகப் பயணம் மேற்கொண்டார். அங்கு அவர் கட்சியின் இன்சாஃப் மாணவர் கூட்டமைப்பு முன்னிலையில் பரப்புரையாற்றினார்.