குவைத் நாட்டில் அடுக்குமாடியில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு த. வெ .க தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
குவைத் நாட்டில் மங்கஃப் நகரில் உள்ள 6 மாடி குடியிருப்பில் இந்தியத் தொழிலாளர்கள் அதாவது கேரளா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்அதிக அளவில் வசித்து வருகின்றனர்.
இந்த அடுக்குமாடி குடியிருப்பு கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபரும் என்டிபிசி குழுமத்தின் உரிமையாளருமான ஆபிரகாமுக்குச் சொந்த கட்டடம் ஆகும்.
இந்நிலையில்,இன்று அதிகாலை திடீரென அதிகாலை 4.30 மணி அளவில் கீழ்த்தளத்தில் தீவிபத்து ஏற்பட்டது. அடுக்குமாடிக் குடியிருப்பில் கண்ணாடிகள் அதிகம் இருந்ததால் தீ மளமளவென மேல்நோக்கிப் பரவியது.
தீவிபத்து நிகழ்ந்ததும் மாடியில் இருந்து பலர் குதித்துத் தப்ப முயன்றனர். எனினும் இந்த விபத்தில் 2 தமிழர்கள், கேரளாவைச் சேர்ந்த நால்வர் உள்பட 43 பேர் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் அவசர மருத்துவ பிரிவில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குவைத் நாட்டில் அடுக்குமாடியில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு த. வெ .க தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,” குவைத் நாட்டின் மங்காஃப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழ்நாடு, கேரளம் & பிற மாநிலங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அகால மரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.என்று உருக்கம் தெரிவித்துள்ளார்.