தென்கிழக்கு ஐரோப்ப நாடுகளில் ஒன்றான கிரீஸ் பால்கன் தீபகற்பத்தின் தெற்கு முனையில் அமைந்துள்ளது.
இதன் தலைநகரமான ஏதென்ஸ் 3 பக்கம் மலைகளால் சூழப்பட்டுள்ளது.
3000 ஆண்டு பழமையான நாடாக கருதப்படும் ஏதென்ஸில் பல சிறப்பு வாய்ந்த நினைவுச் சின்னங்கள் மற்றும் பண்டைய கால கட்டடங்கம் உள்ளது.இதனால் வெளிநாட்டினர் விரும்பிச் செல்லும் சுற்றுலா தலங்களில் ஒன்றாக இந்நகரம் உள்ளது.
இந்நிலையில் நேற்று ஏதென்ஸில் உள்ள சிண்டக்மா சதுக்கம், பார்த்தியான் ஆலயம், லிகாப்டஸ் குன்று உள்ளிட்ட பகுதிகள் ஆரஞ்சு நிறமாக மாறியது. திடீரென நகர் ஆரஞ்சு நிறத்தில் காட்சியளித்ததும் அங்கிருந்த மக்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் ஒருவர் மணலில் மூடப்பட்ட தங்கள் விண்ட்ஷீல்டின் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார், மற்றொருவர் அந்தக் காட்சியை “அபோகாலிப்டிக்” என்று முத்திரை குத்தி தங்கள் சுற்றுப்புறங்களின் காட்சிகளை அவரின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டார்.
இதையும் படிங்க: இண்டர் நெட் இல்லாமலேயே வாட்ஸ் அப்பிலும் ஷேரிங் வசதி… அட இது புதுசுல்ல!
இதனால் கிரேக்க தலைநகர் ஆரஞ்சு படலமாக இருக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வந்தன.இதனைத் தொடர்ந்து பலரும் என்ன தான் ஆச்சு கிரீஸ் சதலைநகருக்கு என்று கேள்வி எழுப்பி வந்தனர்.இந்நிகழ்விற்கான உண்மையான காரணம் குறித்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தற்போது விளக்கம் அளித்துள்ளது.
அதன் படி, மார்ச்-மே மாதங்களில் பொதுவாக வட ஆப்பிரிக்காவிலிருந்து கிரீஸ், சிப்ரஸ், மாசிடோனியோ உள்ளிட்ட நாடுகளுக்கு மேக கூட்டங்கள் நகருவது வழக்கம்.இப்படியொரு நிகழ்வின்போது எதிர்பாராதவிதமாக இந்த மேக கூட்டத்துடன் சகாரா பாலைவனத்தின் மண் துகள்கள் கலந்ததால் மேகக் கூட்டங்கள் ஆரஞ்சு நிறமாக மாறியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2 நாட்களுக்கு இந்நிலை நீடிக்கும் என அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.தூசி செறிவுகள் (CONCENTRATION) சூரிய ஒளியைக் குறைத்து,நுண்ணிய மாசு துகள்களின் செறிவை அதிகரிப்பதால், சுற்றுசூழல் மாசுபாடு அதிகரிப்பதுடன் சுவாச பிரச்சனை, கண் எரிச்சல் போன்ற அடிப்படை சுகாதார பிரச்சனை ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளார்.