அமெரிக்க விண்வெளி வீராங்கனையும் மற்றும் கப்பல்படை அதிகாரியும் ஆன சுனிதா வில்லியம்ஸ் செப்டம்பர் 16, 1965 ல் பிறந்தார்.
அவரது தந்தை தீபக் பாண்டியா இந்தியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற நரம்பியல் நிபுணர் ஆவார். அவரது தாயார் உர்சுலின் போனிபாண்டியா ஒரு ஸ்லோவேனியர் ஆவார்.
சுனிதா வில்லியம்ஸ்) யுனைடெட் ஸ்டேட்ஸ் நேவல் அகாடமியில் இளங்கலை அறிவியல் பட்டமும், புளோரிடா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பொறியியல் நிர்வாகத்தில் முதுகலை அறிவியல் பட்டமும் பெற்றவர்.
விண்வெளியில் பயணம் செய்த பெண்களில் அதிக நேரம் விண்வெளியில் பயணம் செய்தவர் என்ற சாதனையைப் பெற்றவர்.
தனது வாழ்க்கையின் 321 நாட்கள், 17 மணி நேரம் மற்றும் 15 நிமிடங்களை விண்வெளியில் கழித்துள்ளார் சுனிதா வில்லியம்ஸ்).
ஏற்கனவே இரண்டு முறை சர்வதேச விண்வெளி நிலையம் சென்று ஆய்வு செய்த அனுபவம் கொண்ட சுனிதா வில்லியம்ஸ், தற்போது மூன்றாவது விண்வெளி பயணத்தைத் தொடங்க உள்ளதாக நாசா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆரஞ்சு நிறத்தில் மாறிய வானம்! திக்திக் நிமிடங்கள்.. ஏதென்ஸில் நடந்தது என்ன?
போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தான் இந்தப் பயணம் மேற்கொள்ள இருக்கிறது.
எனவே இதற்கானபயணிகளை ஏற்றிச் செல்லும் பரிசோதனை பயணத்தில் முதல் விமானிகளில் ஒருவராகப் பயிற்சி பெற்று வருகிறார்.
சுனிதா வில்லியம்ஸ் உடன் விண்வெளி வீரர் புட்ச் வில்மோரும் இந்தப் பயணத்தில் இணைய இருக்கிறார்.
இவர்கள் இருவரும் யுனைடெட் லாஞ்ச் அலையன்ஸ் அட்லஸ் V ராக்கெட் மூலம் போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏறிச் சென்று, சுற்றுப் பாதையில் செல்லும் ஆய்வகத்திற்கு செல்வார்கள்.
சுமார் ஒரு வாரக் காலம் ஆய்வகத்தில் தங்கி ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்
மே 6 திங்கள் அன்று 10:34 p.m. EDT மணிக்குப் புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் ஸ்பேஸ் ஃபோர்ஸ் ஸ்டேஷனில் உள்ள விண்வெளி ஏவுதள வளாகம்-41ல் இருந்து ராக்கெட் ஏவப்படும் என்று நாசா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.