2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில், அனைத்து கட்சி தலைவர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், கிருஷ்ணகிரிமாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராம்நகர் பகுதியில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற வேட்பாளர் C.நரசிம்மனை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்ட மத்தில் இந்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசினார்.
டெல்லியில் இருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வந்த அவர் அங்கிருந்து கார் மூலம் பிரசார பொதுக்கூட்டத்திற்கு வந்தார்.பொது கூட்டத்திற்கு வந்த அவருக்கு பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இதையும் படிங்க: தப்புக்கணக்கு போடுகிறார் நிர்மலா சீதாராமன் – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..!!!
மேலும் கூட்டத்தில் பா.ஜ.க., பா.ம.க., மற்றும் கூட்டணி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பொதுகூட்டத்தில் பாஜகவை ஆதரித்து பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்திய அரசு சார்பில் தொழில்வளர்ச்சி அடைந்து உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் 2.75 லட்சம் பேரின் வீட்டிற்கு குழாய் மூலம் நேரடியாக குடிநீர் மூலம் விநியோக செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ”கச்சத்தீவு விவகாரம்..”பற்றவைத்த அண்ணாமலை.. அதிரடி காட்டிய நிர்மலா சீதாராமன்!
மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஸ்டார் அப்திட்டம் மூலம் 465 பேருக்கு ரூ.60 கோடி கிடைத்துள்ளது. பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்குப் ஒவ்வொரு முறை வரும் போதும் பலகோடி மதிப்பிலான திட்டங்களைக் கொடுத்துச் செல்கிறார்.
அதில் தொழில்களை பெறுவதற்காக திமுகவினர் வருகின்றனர் என குற்றம் சாடினார்.நாட்டுமக்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாவதை தடுக்காமல் போதைப் பொருளை இறக்குமதிக்கு திமுகவினர் ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர்.
போதைப் பொருட்களின் ஆதாயத்தை வைத்துக்கொண்டு அரசியல் செய்யும் திமுகவினரை மக்கள் நிராகரிக்க வேண்டும்.
ஊழல் இல்லாத அரசால் தான் தனது நாட்டையும், நட்டுமக்களையும் முன்னேற்றபாதைக்கு கொண்டு செல்ல முடியும். நம் தலைவர் மோடி அவர்களால் தான் இந்தியாவில் நல்லாட்சியை நிலை நிறுத்த முடியும்.