மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாகத் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் அக்கட்சியில் தலைவர் பதவியிலிருந்து விலகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியத் தேர்தல் அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத தலைவராக உள்ளவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார்.மகாராஷ்டிரா முதலமைச்சராக மூன்று முறை பதவி வகித்துள்ள அவர்,மகாராஷ்டிரா மாநிலத்தில் தவிர்க்க முடியாத முக்கிய தலைவராக இருந்து வருகிறார்.
இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 15 தொகுதிகளைப் பெற்ற போதிலும் சிவசேனா காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டணியை உருவாக்க சிவசேனா கட்சி ஆட்சி அமைக்க உதவியது. 82 வயதான சரத் பவார் மே 1 1960 ஆண்டு முதல் அரசில் ஈடுபட்டு வருகிறார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டதில் இருந்து அதன் தலைவராக இருந்து வரும் சரத் பவார், மகாராஷ்டிராவின் முதல்வராக 4 முறை பதவி வகித்தார்.இது தவிர மத்தியில் பலமுறை அமைச்சர் பதவியை வகித்து அரசியல் வாழ்வில் அனைத்து உயர்வு தாழ்வுகளையும் சந்தித்துள்ளார்.
இந்த நிலையில்,யாரும் எதிர்பாராத வகையில் தனது தலைவர் பொறுப்பிலிருந்து விலகவதாக அறிவித்துள்ளார் இன்று அவரது ‘லோக் பிரமை சங்கதி’ சுயசரிதை புத்தகத்தின் வெளியிட்டு விழாவின்போது திடீர் என்று அறிவித்தார்.
இது புதிய தலைமுறை கட்சியை வழிநடத்த வேண்டிய நேரம், நிச்சயமாகக் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் கட்சித் தலைவர்கள் யார் என்பதை முடிவு செய்வார்கள் என்று அறிவித்த அவர் தான் பொது வாழ்க்கையிலிருந்து விளக்கமளித்துள்ளார்.
தான் பொது வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறவில்லை பொது வாழ்க்கையில் இருந்து என்னைப் பிரிக்க முடியாது நான் உங்களுடன் இருந்தேன் என் கடைசி மூச்சுவரை நான் உங்களுடன் இருப்பேன் என்றும் என் முடிவிலிருந்து அதை மாற்றிக் கொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பைச் சற்றும் எதிர்பாராத தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மேலும் கண்ணீர் விட்டு அழுததோடு மட்டுமல்லாமல் முடிவைத் திரும்பப் பெற வலியுறுத்திய போராட்டத்தில் ஈடுபட்டன.