ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில் கோடையில் மக்களின் தாகம் தீர்ப்பதற்காக நீர் மோர் பந்தலை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார்.

தமிழகத்தில் வெப்ப அலை அதிகரித்து வரும் சூழ்நிலையில், வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் கோடை வெயிலில் தவிக்கும் மக்களின் தாகம் தீர்ப்பதற்காக அரசியல் கட்சிகள் சார்பிலும், தனியார் அமைப்புகள் சார்பிலும் நீர் மோர் பந்தல்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
இன்று முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில் முதுகுளத்தூர் திமுக மத்திய ஒன்றிய கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.
இதனை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார்.

அப்போது நீர் மோர் பந்தலில் சர்பத் ,தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற பழங்களையும் பொதுமக்களுக்கு அமைச்சர் வழங்கினார்.
இதனை சிறுவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் வெயிலின் தாகம் தீர்க்க வாங்கி சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலாளர்கள் சண்முகம், கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: உணவுத்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது – டிடிவி!