திருச்சியில் அதிக லாபம் தருவதாகக் கூறி பெண்ணிடம் இருந்து மர்மநபர் 6 லட்சம் ரூபாயை ஆட்டையைப் போட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருச்சி மேலப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் டெரி சிந்தியா பிரிசில் (வயது 30). இவரது கணவர், பி.எஸ்.என்.எல்லில் ஊழியராகப் பணி செய்து வருகிறார்.
சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்த சிந்தியாவுக்கு, பகுதி நேர வேலை வேண்டுமா என்னும் விளம்பரம் வந்துள்ளது. அந்த விளம்பரத்தில் இருந்த லிங்கை தொடர்பு கொண்டு மெசேஜ் அனுப்பியுள்ளார்.
அப்போது அவரிடம் பேசிய மர்ம நபர், ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக ரிட்டன் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறியதோடு சில ஐடியாக்களும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கோழிக்குடலில் விஷம் வைத்து கொலை ; பலி எண்ணிக்கை 10 – யார்? எங்கே? ஏன்?
இதனை நம்பி, அந்த மர்மநபர் கூறிய ஆன்லைன் நிறுவனத்தில் தனது பெயரை பதிவு செய்து கொண்ட, சிந்தியா, அந்த நிறுவனத்தில் ரூ.20,252 முதலீடு செய்துள்ளார். அடுத்த சில மணி நேரங்களில் அவரது வங்கிக் கணக்கு ரூ,25,048 வந்துள்ளது.
இதனால் நம்பிக்கை வரவே, சிந்தியா தொடர்ந்து பல்வேறு தவணைகளாக ரூ.6,56,467 முதலீடு செய்திருக்கிறார். ஆனால் நாட்கள் பல கடந்தும், அவருக்கு லாபத்தொகையும் வரவில்லை. அவர் அனுப்பிய பணமும் திரும்ப கிடைக்கவில்லை.
இதையும் படிங்க: வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட சாம் பிட்ரோடா – பதவியை பறித்த கார்கே..!!
இதனால் ஏற்கனவே தன்னிடம் பேசிய மர்மநபரை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த டெரி சிந்தியா பிரிசில், திருச்சி மாநகர சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்துள்ளார்.
அந்தப் புகாரின் பேரில், ஆன்லைன் ஆசைகாட்டி 6லட்சத்தை ஆட்டையைப் போட்ட மர்மநபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.