ராசிபுரம் அருகே 12ம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் காத்தமுத்து கைது செய்யபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சீராப்பள்ளி புதிய கஸ்பா தெரு பகுதியை சேர்ந்தவர் காத்தமுத்து (எ) தியாகராஜன் 12ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் மருத்துவமனை போல் உபகரணங்களை பயன்படுத்தி அப்பகுதி மக்களுக்கு போலியாக ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நாமக்கல் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைக்க தகவலின் அடிப்படையில் அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது காத்தமுத்து வீட்டில் ஆங்கிலம் மருத்துவம் பார்த்து வந்ததை நாமக்கல் சுகாதாரத்துறை அதிகாரி பிரபு, நாமகிரிப்பேட்டை சுகாதாரத்துறை அதிகாரி பெருமாள், சித்த மருத்துவத் துணை அதிகாரி பூங்கொடி ஆகியோர் கையும் கழுவுமாக பிடித்துள்ளனர்.
சுகாதாரத் துறை அதிகாரிகள் பிடிபட்ட காத்தமுத்தை நாமகிரிப்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் மனோகரன் போலி மருத்துவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று வழக்கு பதிவு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்…