டெல்லியில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று ஆம்ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் 18 வது நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் உள்ள 7 நாடாளுமன்றத் தொகுதிகளையும் பாஜக முழுமையாக கைப்பற்றியது.
பாஜக கூட்டணி 293 இடங்களிலும் , காங்கிரஸ் கூட்டணி – 232 இடங்களுக்கும் மற்றவை – 18 கைப்பற்றியது.
இந்த நிலையில்,டெல்லியில் நாடாளுமன்ற தேர்தலுக்காக ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது நிலையிலும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
இதையும் படிங்க :“இதற்கெல்லாம் மோடி அரசு தான் நேரடிப் பொறுப்பு” – மல்லிகார்ஜுன கார்கே!
இதனையடுத்து டெல்லி சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணியின்றி தனியாகவே போட்டியிடுவோம் என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியா கூட்டணியில் சேரும்போதே சட்டசபைத் தேர்தல் குறித்து தெளிவுபடுத்தியதாகவும் குறிப்பிட்டார். டெல்லியில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. டெல்லியில் மொத்தம் 70 தொகுதிகள் உள்ளது.
முன்னதாக கடந்த முறை 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.