டெல்லியில் (delh)i50 வயது பெண்ணை 17 வயது சிறுமி நாட்டு துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி (delhi)சுபாஷ் மஹால் பகுதியில் சேர்ந்தவர் குர்ஷிதா என்ற 50 வயது பெண் அவர் அந்த பகுதியில் கடை ஒன்றை நடத்தி வருகிறார். கணவன் இழந்த நிலையில் 25 அந்தப் பகுதியில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் அந்த கடைக்கு நேற்று மாலை 5:30 மணி அளவில் வந்து 17 வயது சிறுமி திடீரென தன்னிடம் இருந்த நாட்டு துப்பாக்கியை கொண்டு 50 வயது மதிக்கத்தக்க குஷிதாவை சுட்டுள்ளார்.
இதனைக் கண்ட அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தன .மேலும் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இந்த தகவலை அடுத்து காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து சிறுமையை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டன அப்பொழுது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கடந்த 2021 ஆம் ஆண்டு 17 வயது சிறுமிக்கு குஷிதாவின் மகன் சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு செய்து உள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அந்த வாலிபரை கைது செய்து போலீசார் சிறக்கில் அடித்துள்ளன இந்த நிலையில் தான் இரண்டு ஆண்டுகள் கழித்து அந்த வாலிபரின் தாயாரை சிறுமி துப்பாக்கியால் சுட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது குறித்து போலீசார் விசாரணையில் அந்த சிறுமி தெரிவிக்கையில் தனக்கு நேர்ந்த அவலத்திற்கு பழிவாங்கும் விதத்தில் இந்த செயலை சிறுமி செய்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என்பதையும் போலீசார் மூன்று கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
மேலும் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த குஷிதா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.