ஆரம்பித்த சில நாட்களிலேயே வந்தே பாரத்(vande-bharat )ரயில் விபத்துக்குள்ளாவது, அதிலும் மாடுகள் மோதி ரயிலின் முன்பகுதி சேதம் அடைவது மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி பிரதமர் மோடி இந்தியாவின் மூன்றாவது அதிவேக ரயிலான வந்தே பாரத் (vande-bharat)ரயிலின் சேவையை தொடங்கி வைத்தார். மும்பை முதல் குஜராத்தின் காந்திநகர் வரை செல்லும் இந்த ரயில் முதல் நாள் செல்லும்போதே தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த எருமை மாடுகள் மேல் முட்டி விபத்துக்குள்ளானது.
விபத்தில், ,பசுமாடு மோதி மீண்டும் ரயிலின் முன்பகுதி சேதமடைந்துள்ளது. ரயிலின் என்ஜின் மற்றும் மற்ற பாகங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், விபத்தை ஏற்படுத்திய மாடுகளின் உரிமையாளர்கள் மீது மேற்கு ரயில்வே வழக்கு பதிவு செய்தது.அதோடு இரண்டு சம்பவத்திலும் எந்த பயணிக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்று மேற்கு ரயில்வே குறிப்பிட்டுள்ளது.பின்னர் மும்பை சென்ட்ரலில் உள்ள ரயில் பெட்டி பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் தளத்திற்கு கொண்டுவரப்பட்டு இயக்கப்பட்டது.
இந்த நிலையில் ,டெல்லியில் இருந்து உத்தரப் பிரதேசம் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரெஸ் நேற்று காலை 6 மணி அளவில் புது டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இந்த ரயில் சுமார் 90 கிமீ பயணத்திற்குப் பின் குஜ்ரா என்ற ரயில் நிலையத்தை அடைந்த போது ரயில் சக்கரத்தில் கோளாறு இருந்தது தெரியவந்தது.
சி8 கோச் அருகே உள்ள ரயில் சக்கரங்களில் பேரிங் கோளாறு ஏற்பட்டு பணி புரியும் கேட்மேனால் கண்டுபிடிக்கப்பட்டது. அதிவேக வண்டிகளில் இந்த பேரிங் தான் பாதுகாப்பான முக்கிய பங்காற்றுகிறது. இதில் கோளாறு என்பதை கவனிக்கவிட்டால் மிக ஆபத்தான விபத்துகள் ஏற்படும் சாத்தியங்கள் உள்ளது.
எனவே, ரயிலில் பயணித்த 1,068 பயணிகளும் சதாப்தி ரயிலுக்கு மாற்றப்பட்டு, இந்த வந்தே பாரத் ரயிலை டெப்போவுக்கு கொண்டு சென்று சரி செய்துள்ளனர். இந்த கோளாறுக்கான காரணம் என்ன என்பதை கண்டறிய உரிய விசாரணை நடத்தப்படும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
நகரங்களுக்குள் நெடுந்தூரம் பயணிக்கும் வந்தே பாரத் ரயிலுக்கு பயன்படுத்துவது கோளாறுகளை தவிர்ப்பதற்கான நடைமுறை சாத்தியகூறுகளை உருவாக்கினால் இதுபோன்ற விபத்துகளை தடுக்கலாம் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.