சிறுமிகளுக்கு குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின் வழங்குவது குறித்து கேள்வி எழுப்பிய மாணவிக்கு ஐஏஎஸ் அதிகாரியும் ,பீகார் மாநில குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை செயலருமான ஹர்ஜோத் கவுர் பாம்ரா ‘அரசிடம் இருந்து அடுத்து ஆணுறையை கேட்பீர்கள்… என்று கடுமையாக பதிலளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீகாரில் 9-10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காக குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை ஏற்பாடு செய்த விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ‘சிறுமிகளுக்கான கண்ணியத்தை மேம்படுத்துவோம்’ என்ற தலைப்பில் இதில் பள்ளி சிறுமிகளும், மாநில குழந்தைகள் நல மேம்பாட்டு துறை செயலர் ஹர்ஜோத் கவுர் பாம்ரா உள்பட உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
அதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறுமி ,எங்களுக்கு தேவையான அனைத்தையும் அரசு செய்கிறது.மேலும் எங்களுக்கு 20 முதல் 30 ரூபாய்க்கு பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்களை அரசால் வழங்க முடியுமா என்பது பள்ளி மாணவனின் கேள்வி எழுப்பினார். இதற்க்கு பதில் அளித்த ஐஏஎஸ் அதிகாரி ஆனால், ‘நாளைக்கு அரசு ஜீன்ஸ் தர வேண்டும் என்று சொல்வீர்கள், அதன் பிறகு குடும்பக் கட்டுப்பாடு, அதாவது ஆணுறைகளை அரசு வழங்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்’ கூறியுள்ளார்.
இதற்கு பதில் கூறிய சிறுமி, ‘மக்கள் வாக்களித்துதானே அரசை உருவாக்குகிறார்கள்’ என்றார். இதற்கு பதில் அளித்த பாம்ரா, ‘இது முட்டாள்தனமான பதில். நீங்கள் வாக்களிக்க வேண்டாம். பாகிஸ்தானுக்கு போங்கள். பணத்திற்கும், சேவைக்கும் தானே வாக்களிக்கிறீர்கள்?’ என்று கூறினார்.
பாம்ராவுக்கு உடடினயாக பதில் அளித்த சிறுமி, ‘நான் ஏன் பாகிஸ்தானுக்கு போக வேண்டும். நான் இந்தியன்’ என்று கூறி அதிர வைத்தார். இவ்வாறு சிறுமிக்கும், ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஜோத் கவுர் பாம்ராவுக்கும் இடையே நடந்த விவாதம் நடைபெற்றது
அப்போது பள்ளியில் உள்ள கழிவறையின் மோசமான நிலை குறித்து மற்றொரு குழந்தையின் கேள்விக்கு பதில் அளித்த அதிகாரி உங்கள் வீட்டில் தனி கழிப்பறை உள்ளதா? நீங்கள் எப்போதும் பல இடங்களில் பல விஷயங்களைக் கேட்டால், அது எப்படி முடியும்? அரசாங்கம் அனைத்தையும் வழங்க வேண்டும் என்று ஏன் நினைக்கிறீர்கள்? இந்த எண்ணம் தவறானது. அதை நீங்களே செய்ய வேண்டும் என்று விளக்கினர்
A girl from a slum in Bihar asks for subsidised sanitary pads at an event on ‘enhancing value of girls’ and IAS officer Harjot Kaur Bhamra responds, “Want free condoms too?” Should such insensitive officers be allowed to remain in service? @IASassociation @biharCMO pic.twitter.com/GrhggEpqXZ
— Yashpal Barupal (@YPBarupal) September 28, 2022
மேலும் மாணவர்களுடன் உரையாடிய வீடியோ வெளியானதையடுத்து இந்த சம்பவம் சர்ச்சையானது. ஆனால் அவரது கருத்துகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக அந்த அதிகாரி பதிலளித்தார். பெண்களின் உரிமைகள் மற்றும் அதிகாரமளிப்பதற்கான பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார். இது போன்ற சர்ச்சைகள் சமூகத்தில் தனது மதிப்பை அழிக்கும் வகையில் இருப்பதாகவும் அவர் பதிலளித்துள்ளார்.