குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய வெற்றியை பெற்றதை கொண்டாடும் இடத்தில் விழுப்புரம் புதுவை சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு பாஜக நகர தலைவர் வடிவேல் பழனி தலைமையில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாநில உள்ளாட்சி பிரிவு துணைத் தலைவர் வெங்கடேசன் மாநில செயற்குழு உறுப்பினர் தியாகராஜன் நகரப் பொதுச் செயலாளர் ஜெகதீஷ் உள்ளிட்ட பாஜக தொண்டர்கள் பலர் இருந்தனர்.
குஜராத்தில் உள்ள 182 சட்டமன்ற தொகுதிகளில் 93 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக டிசம்பர் 5 திங்கள் அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல் கட்டமாக 89 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த நிலையில் குஜராத்தில் ஆட்சி அமைக்க ஒரு அரசியல் கட்சி அல்லது கூட்டணி குறைந்தபட்சம் 92 இடங்களைப் பெற வேண்டும். மேலும் குஜராத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் உள்ளது.
மினி சென்னை போன்று மணிநகர் குஜராத்தில் அமைந்துள்ளது. தமிழர்கள் வாழும் இந்த மணி நகர் தொகுதியில் கடந்த 32 ஆண்டுகளாக பாஜகவைத் தவிர வேறு யாரும் ஜெயித்ததில்லை என்ற வரலாறு உண்டு அது போல் தான் இந்த தேர்தலிலும் மணி நகர் தொகுதியை பாஜக கைப்பற்ற உள்ளது.
நூற்பாலைகளில் வேலை செய்வதற்காக 1910-களில் குடும்பம் குடும்பமாக சென்ற தமிழர்கள் தற்போது அங்கேயே தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர்.மேலும் இந்த தொகுதியில் இதுவரை அங்கு பாஜகவை தவிர இருக்கும் தமிழர்கள் அனைவரும் வாக்களித்து வந்திருக்கிறார்களாம்.
அந்த கால கட்டத்தில் குஜராத்தின் முதல்வராக இருந்த மோடி கூட, 2002, 2007 மற்றும் 2014 ஆகிய மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வாகியிருக்கிறார். இந்த நிலையில் பாஜகவிற்கு மணிநகர் பாஜகவின் கோட்டையாக உள்ளது.
நரேந்திர மோடி குஜராத் முதல்வராக பதவி வகித்த போது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் குஜராத் மாநிலத்தில் பேரிடர் மீட்பு பணிகளில் சிறப்பாக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் குஜராத் மக்களின் பாராட்டுகளை பெற்றவர் திருப்புகழ். தற்போ 2010 கால கட்டத்தில் சிபிஐ சிறப்பு புலனாய்வுக் குழு டிஜிபியாக இருந்தகந்தசாமி ஐபிஎஸ் பல்வேறு வழக்குகளை மிகத்திறமையாக கையாண்டவர்.
இதனால் தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை குஜராத் அரசு மிகுந்த மரியாதையோடு நடத்துவதோடு, அவர்களுக்கு முக்கியமான பொறுப்புகளை தொடர்ந்து கொடுத்து வருகிறது.
இது குஜராத்தில் வாழும் தமிழர்களுக்கு உணர்வு ரீதியாக மகிழ்ச்சியை தருவதோடு, தமிழர்கள் மீது குஜராத் அரசு வைத்திருக்கும் கன்னியத்தையும் காட்டுகிறது. இதனால் தான் தமிழர்கள் தொடர்ந்து பாஜகவை வெற்றிபெறச் செய்கிறார்கள் என்று தற்பொழுது வெளியாகி உள்ளது.
ஆனால் குஜராத் சட்டமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்டத் தேர்தலில், அகமதாபாத் மாவட்டத்தில் வெறும் 55.21 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.