பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடும், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.சுக்கு ஆதரவளிப்பதாக அமெரிக்க தமிழர்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ராமநாதபுரத்தில் ஜே.பி.நட்டா ; ஓ.பி.எஸ்சை ஆதரித்து ரோடு ஷோ!
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாகப் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், அவருக்கு தங்கள் ஆதரவை அளிப்பதாக அமெரிக்காவாழ் தமிழர்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர். நியூயார்க் உள்ளிட்ட பகுதிகளில் அகண்ட திரைகளில், ஓ.பன்னீர்செல்வத்தின் வீடியோவையும், பலாப்பழம் சின்னத்தையும் வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பழக்க தோஷத்தில் இரட்டை இலை – பலாப்பழத்தை மறந்த ஓ.பி.எஸ்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை மீட்டெடுத்து தமிழர்களின் உரிமையை காத்த மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் ஜல்லிகட்டை மீட்க அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்ட தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும் உலகத்தமிழர்கள் சார்பாக நன்றியினையும் வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர்கள் வீடியோ பதிவில் தெரிவித்துள்ளனர்.