பிளஸ் 1 தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட செல்போனுக்கு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகிறது.
தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 4ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை பிளஸ் 1 தேர்வு நடைபெற்றது. மொத்த 3,302 மையங்களில், பள்ளி மாணாக்கர்கள், 8,20,187 பேர், தனித்தேர்வர்கள் 4,945 பேர் என மொத்தம் 8லட்சத்து 25ஆயிரத்து 132 பேர் தேர்வு எழுதினார்கள்.
தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தும்பணி நடந்து மதிப்பெண் பதிவேற்றுவது உள்ளிட்ட பணிகள் நிறைவு பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி நாளை (மே 14) பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாகிறது. பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியானபடி 9.30மணிக்கு பிளஸ் 1 தேர்வு முடிவுகளும் வெளியாகிறது.
தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணைய தளங்களில் சென்று பார்த்துக் கொள்ளலாம்.
மேலும்,மாணவர்கள் தாங்கள் படித்த கல்விநிலையங்களுக்கும் சென்று மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். இதே போல், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங் கள் மற்றும் அனைத்து மைய கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர்த்து, ஏற்கனவே பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் பதிவு செய்துள்ள கைபேசிக்கும், குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
தேர்வு மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.