உங்களது ‘அன்பின் கடை’ மேலும் பலம் பெறட்டும்” என்று ராகுல் காந்தி எம்.பி-க்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது 54 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனையொட்டி காங்கிரஸ் தலைவர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் உள்பட பலதரப்பினரும் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ”100 கோடி ஊழல் ” நடிகை ரோஜா மீது புகார் -ஆந்திராவில் பரபரப்பு!
அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்திக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “மதச்சார்பற்ற இந்தியாவை நோக்கிய உங்களது இடைவிடாத போராட்டம் தொடர இந்த பிறந்தநாளில் வாழ்த்துகிறேன். உங்களது ‘அன்பின் கடை’ மேலும் பலம் பெறட்டும்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.