விளம்பரத்திற்காகப் பேசும் முட்டாள்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள் என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு காயத்ரி ரகுராம் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை அமைந்த கரையில் பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு மாநில நிர்வாகிகள்,பாராளுமன்ற வேட்பாளர்கள் மற்றும் மாவட்டத்தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என்பதை யாரும் மறுக்க முடியாது.
கரசேவையை காரணம்காட்டி பாஜக ஆட்சி கலைக்கப்பட்ட ” போது அதனை துணிச்சலாக கண்டித்தவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவை பெரிய வட்டத்திற்கு எடுத்து செல்ல விரும்புகிறோம்.
இதையும் படிங்க: ”ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என்பதை யாரும் மறுக்க முடியாது”- தமிழிசை!
ஜெயலலிதாவை அதிமுகவினர்தான் குறுகிய வட்டத்தில் சுருக்க நினைக்கின்றனர். ஜெயலலிதா இருந்திருந்தால், நிச்சயம் அயோத்தி ராமர் கோயில் சென்றிருப்பார் என்று தனது கருத்துகளை முன்வைத்து பேசியிருந்தார்.
இந்த நிலையில், விளம்பரத்திற்காகப் பேசும் முட்டாள்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள் என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு காயத்ரி ரகுராம் பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து அதிமுக- மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ” எந்த அர்த்தமும் இல்லாமல் இந்த தளர்வான பேச்சை சொல்ல நீங்கள் கவர்னர் பதவியை ராஜினாமா செய்திருக்க கூடாது.
நீங்கள் இந்துத்துவவாதியாகவும் மதவெறியராகவும் இருக்க விரும்பினால் நீங்கள் இருக்க முடியும். மற்ற தலைவர்கள் இல்லாத போது, அவர்கள் உயிருடன் இல்லாத போது அவர்களை பற்றி தவறாக முத்திரை குத்த வேண்டாம்.. முட்டாள்தனம். அதன் good manners இல்லை.
நீங்கள் படித்த நல்ல மனிதர் மேடம், விளம்பரத்திற்காகப் பேசும் முட்டாள்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். புரட்சித் தலைவி ஜெ.ஜெயலலிதா அம்மா உயிருடன் இருந்தபோது இதைப் பற்றி பேச நீங்கள் துணிந்திருக்க வேண்டும்.என்று குறிப்பிட்டுள்ளார்.