நடிகையும் அமைச்சருமான நடிகை ரோஜாவை எதிர்த்து அவரது தொகுதியில் உள்ள சொந்த கட்சியின் நிர்வாகிகள் பலர் விலகி தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்திருப்பதாக தெரிவித்துள்ளது ரோஜாக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
2024 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் 13 மே 2024 அன்று நடைபெற உள்ளது.இந்த தேர்தலில் , மாநில சட்டப் பேரவையின் 175 சட்டப் பேரவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்பட உள்ளது.
ஆந்திராவில் நகரி சட்டப்பேரவை தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அமைச்சரும் நடிகையுமான ரோஜா மீண்டும் போட்டியிடுகிறார். அவர் போட்டியிடும் இத்தொகுதி தமிழக – ஆந்திர மாநில எல்லை சித்தூர் மாவட்டத்தில் உள்ளது.
இந்த நிலையில் ,ஆந்திராவில் ஆளும் கட்சியான ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் ரோஜாவிற்கு எதிராக அவர் போட்டியிடும் நகரி தொகுதி நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மறுபடியும் அமைச்சராகிடனும் முருகா! திருத்தணியில் முருகன் கோவிலில் ரோஜா சிறப்பு பூஜை
மேலும் அமைச்சர் ரோஜா பல்வேறு ஊழல் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் திட்ட பணிகளில் 10% வரை கமிஷன் பெறுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர் .
தற்பொழுது இரண்டு ஜில்லா பரிஷத் உறுப்பினர்கள் 6 பஞ்சாயத்து தலைவர்கள் விலகுவதாக கூறிய நிர்வாகிகள் மேலும் பலர் விலக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக முதலமைச்சர்ஜெகன்மோகன் ரெட்டியிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
எனவே தாங்கள் ஒட்டுமொத்தமாக தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் முன்னிலையில் தாங்கள் இணைய உள்ளதாக அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
ஆந்திராவில் தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்களை உள்ள நிலையில், சொந்த கட்சியின் நிர்வாகிகள் பலர் விலகி தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்திருப்பதாக தெரிவித்துள்ளது ரோஜாக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் ஆந்திர அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.