Rahul Gandhi tweet-யார் எந்த பக்கம் நின்றார்கள் என வரலாற்றில் பதிவு செய்யப்படும் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 18 வது நாடாளுமன்ற தேர்தல் இம் மாதம் 19 தேதி தொடங்கி ஜூன் 2 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி மத்தியில் ஆட்சியை அமைக்க காங்கிரஸ் கட்சி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை ‘நியாய பத்திரம்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
அதில்,தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, “அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் அழிக்க முயற்சிக்கும் சக்திகளுக்கும், அவற்றைப் பாதுகாக்கும் சக்திகளுக்கும் இடையிலான தேர்தல் இது. இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவோம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் திமுகவின் மாநில சுயாட்சி கொள்கையா?
இந்த சூழலில் யார் எந்த பக்கம் நின்றார்கள் என வரலாற்றில் பதிவு செய்யப்படும் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.இது குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,”
இந்த தேர்தல் இரு கொள்கைகளுக்கு இடையேயான யுத்தம். ஒரு பக்கத்தில் அனைவரையும் ஒருங்கிணைக்கும் சக்தியாக காங்கிரஸ் கட்சி உள்ளது. மற்றொரு பக்கத்தில் எப்போதும் மக்களை பிளவுபடுத்த நினைக்கும் பாஜக இருக்கிறது.
இதையும் படிங்க: மகளிருக்கு ஆண்டுக்கு 1 லட்சம்; அம்மாடியம்மோவ்.. காங்கிரஸ் அசத்தல் அறிவிப்பு!
நாட்டை பிளவுபடுத்தும் சக்தியின் பக்கம் நின்றவர்கள் யார்? மக்களின் ஒற்றுமை, சுதந்திரத்திற்கு பாடுபட்டவர்கள் யார்? என்பது வரலாற்றில் பதிவு செய்யப்படும்.
ஆங்கிலேயர் காலத்தில் ஒத்துழையாமை இயக்கத்தில் சிறை சென்றவர்களுக்கு ஆதரவாக நின்றவர்கள் யார்? அரசுக்கு ஆதரவாக நடந்துகொண்ட பிளவுவாத சக்திகள் யார் என நமக்கு தெரியும்.
அரசியல் தளத்தில் பொய்களை அள்ளி விடுவதன்மூலம் வரலாற்றை மாற்றிவிட முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.