தமிழகம் , கேரளா , பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களை தொடர்ந்து மேற்கு வங்காளத்தில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் ஆளுநர் ஆனந்த போஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருவது பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அம்மாநில ஆளுநர் ஆனந்த போஸ் நடைபெறும் சட்டம் ஒழுங்கினை சுட்டிக்காட்டி திரிணாமுல் அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்.இந்நிலையில் ஆளுநர் ஆனந்த போஸ் மீது பாலியல் புகார் எழுந்து அம்மாநில அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆளுநர் மாளிகையில் பணிபுரிந்த பெண் ஊழியர் ஒருவரிடம் ஆளுநர் ஆனந்த போஸ் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி ஹரே தெரு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருக்கிறார்.
இந்த விவகாரம் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சகாரிகா கோஸ் இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் ,திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ,இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியதை அடுத்து ஆளுநர் ஆனந்த போஸ் இதற்கு விளக்கம் அளித்திருக்கிறார்.அதில் கூறியிருப்பதாவது:
“இது மாதிரியான புனையப்பட்ட கதைகளால் நான் பயப்பட மாட்டேன். என்னை இழிவுபடுத்தி ஆதாயம் தேட விரும்புவோரை கடவுள் ஆசீர்வதிக்கட்டும். உண்மை வெல்லும்” என்று கூறியிருக்கிறார்.
இது மாதிரியான புகார்களால், மேற்கு வங்கத்தில் ஊழல், வன்முறைக்கு எதிரான தனது போராட்டத்தை தடுத்து நிறுத்த முடியாது என்றும் அவர் உறுதிபட தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரனும் கர்நாடக மாநில ஹாசன் தொகுதி எம்.யுமான பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டு நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் , மேற்க்கு வங்காள ஆளுநர் ஆனந்த போஸ் விவகாரமும் அரசியல் வட்டாரத்தில் புயலை
கிளப்பியுள்ளது.